Home
Mobile

மோட்டோ ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான புதிய 'டோக்கிங்' சாதனம்!

By Super
மோட்டோ ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான புதிய 'டோக்கிங்' சாதனம்!

தனது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இணைக்கும் வகையில் லேப்டாக் என்ற புதிய சாதனத்தை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.

லேப்டாக் 100 என்ற பெயரில் வரும் இந்த புதிய சாதனத்தை மோட்டோரோலா ஆன்ட்ராய்டு போன்களில் இணைத்து திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெரிய திரையில் பார்த்து மகிழலாம். மேலும், இதில், கீபோர்டு கொடுக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் உள்ள பைல்களை இந்த லேப்டாக் மூலம் எளிதாக டைப் செய்ய முடியும்.

மோட்டோரோலா லேப்டாக் 10.1 இஞ்ச் திரையுடன் வந்துள்ளது. இதனால் மிக உயர்ந்த துல்லியமான 1366 x 768 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்க முடியும். இதனுடைய வெளி தோற்றம் 2.2 எல்பிஎஸ் எடை கொண்டபிலாஸ்டிக் மூலம் செய்யப்பட்டுள்ளதால், இலகு எடை கொண்டதாக இருக்கும். கையாள்வதும் சுலபம்.

டைப் செய்வது பற்றி கவலை வேண்டாம். இதில் கியூவர்டி கீப்பேட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீப்பேடில்வால்யும், ப்ளே, நெக்ஸ்ட், பேக் போன்ற விஷயங்களுக்கு பிரத்தியேக பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்சத்தத்தை குறைப்பது, ப்ளே செய்வது போன்ற வேலைகளை இன்னும் எளிதாகுகிறது. இதில் புதுமையாக இரண்டு யூஎஸ்பி போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

லேப்டாக்-100 ஸ்மார்ட்போனில் ஃபயர் பாக்ஸ் வெப் வசதியை பிரீ-இன்ஸ்டால் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. முழுமையான வித்தியாசத்துடன் வெளிவர இருக்கும் இந்த லேப்டாக்-100 ஸ்மார்ட்மொபைல் ரூ.13,500விலையை ஒட்டிதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டமோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பேருதவி புரியும் சாதனமாகஇருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X