நவம்பர் 13 : அட்டகாசமான மோட்டோ எக்ஸ்4 அறிமுகம்.!
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இப்போது புதிய மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது,அதன்படி கடந்த அக்டோபர் 3-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற நிலையில் சில காரணங்களால் வெளியிட்டு தேதியை ஒத்திவைத்தது. இப்போது அந்நிறுவனம் கூறியுள்ள தகவலின் அடிப்படையில் வரும் நவம்பர் 13-ம் தேதி மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இந்திய மொபைல் சந்தையில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடல்.

5.2-இன்ச் டிஸ்பிளே:
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications