ரூ.6,999 க்கு விற்பனையை ஆரம்பித்த லேட்டஸ்ட் Motorola ஸ்மார்ட்போன்.. நம்பி வாங்கலாமா?
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தை பார்த்து.. "யார் சாமி இவன்? வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செஞ்சி இருக்கான்!" என்று கேட்கும் அளவிற்கு ஒரு என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது; தற்போது அதன் இந்திய விற்பனையும் தொடங்கியுள்ளது.
அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இதற்கு பதிலாக வேறு என்னனென்ன ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Moto E13 இந்திய விற்பனை இன்று முதல் ஆரம்பம்
நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று முதல் அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி (மதியம் 12 மணி) முதல் தொடங்கியது.
இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் மற்றும் அரோரா க்ரீன், காஸ்மிக் பிளாக் மற்றும் க்ரீமி ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.
Moto E13 அசல் விலை மற்றும் ஆபர் விலை
அசல் விலையை பொறுத்தவரை, மோட்டோரோலா மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 64 ஜிபி ஆப்ஷன் ரூ.6,999 க்கும், 4 ஜிபி + 64 ஜிபி ஆப்ஷன் ரூ.7,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ லாக் (Jio Lock) என்கிற ஒரு ஆபர் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய 15 நாட்களுக்குள் அதில் ஜியோ சிம் காரட்டை லாக் செய்தால் ரூ.700 என்கிற பிளாட் கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை விலையை முறையே ரூ.6,299 மற்றும் ரூ.7,299 ஆக குறைக்க முடியும்.
இது தவிர, எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு, இன்டஸ்லேண்ட் கிரெடிட் கார்டு மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்ட்டின் கீழ் செய்யும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் (அதாவது ரூ.1,000 வரையிலான) தள்ளுபடியும் கிடைக்கும்.
Moto E13 அம்சங்கள்
- இது டூயல் நானோ சிம் ஆதரவை வழங்கும் ஒரு 4ஜி போன்
- பிளாஸ்டிக் பேக் பேனலுடன் ஸ்டைல் ஆன வடிவமைப்பு
- வாட்டர் ட்ராப் நாட்ச் டிசைனுடன் 6.5-இன்ச் எச்டி+ டிஸ்பிளே
- 13எம்பி சிங்கிள் ரியர் கேமரா (f/2.2)
- ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸிற்கான (Phase Detection Autofocus) ஆதரவு
- 30fps வேகத்தின் கீழ் 1080p வீடியோ ரெக்கார்டிங்
- 5எம்பி செல்பீ கேமரா
- மாலி-ஜி67 எம்பி1 ஜிபியு உடனான யுனிசாக் டி606 சிப்செட்
- 2ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 1டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு
- 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஓஎஸ்
- வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக்.
Moto E13 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா?
நிறைகளை பொறுத்தவரை, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன், நல்ல ஸ்டைல் ஆன டிசைன், விலைக்கு ஏற்ற பெர்ஃபார்மென்ஸ், நல்ல பேட்டரி லைஃப் போன்றவைகளை கூறலாம்
குறைகளை பொறுத்தவரை, இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லை, சுமாரான கேமரா, மெதுவான சார்ஜிங் வேகம் போன்றவைகளை கூறலாம்.
Moto E13 க்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்?
எங்களுடைய முதல் பரிந்துரை ரியல்மி சி33 (Realme C33) மாடலாகும். அதோடு சேர்த்து ரூ.8000 க்குள் வாங்க கிடைக்கும் சில பெஸ்ட் ஸ்மார்ட்போன்களான போக்கோ சி31, ரெட்மி ஏ1, ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம், ரெட்மி 10ஏ போன்ற மாடல்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications