ஏப்ரல் 3 உறுதி.. 125W சார்ஜிங்.. 12ஜிபி ரேம்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்தது மோட்டோரோலா நிறுவனம்.
எனவே வரும் ஏப்ரல் 3-ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் ( Motorola Edge 50 Pro specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ( Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
பர்பிள் (purple), சில்வர் (silver), பிளாக் (black) நிறங்களில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் அறிமுகமாகும். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதவிர 6x ஜூம் ஆப்ஷன், ஆட்டோஃபோகஸ் (autofocus) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனின் ரியர் கேமராவில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ஏஐ (AI) அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன்4500எம்ஏஎச் பேட்டரி (4500mAh battery) வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125W வயர்டு (125W wired) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








