மூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.!

|

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய மோட்டோ ஜி8 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான சிப்செட் வசதி மற்றும் மூன்று ரியர் கேமராக்கள் என பல்வேறு அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட எல்சிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். கேமிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடலின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது.

எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

மற்ற ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அதே சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.அதன்படி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.!அமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.!

 அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் எனமூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை,டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்இ யு.எஸ்.பி. டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 15வாட் டர்போ சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இந்த மாதம் இறுதியில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola introduces Moto G8 Plus specs and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X