Home
Mobile

2021 இல் களமிறங்கும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்னாப்டிராகன் 400 எஸ்ஓசி செயலியுடன் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து தற்போதுவரை வெளியான விவரங்களை பார்க்கலாம்.

மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ஐபிஜா என்ற பெயரில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி அம்சத்தோடு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 சீரிஸ் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா அறிமுகம் செய்ய உள்ள ஐபிஜா க்யூ 1 ஸ்மார்ட்போன் 2021 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது முக்கிய அம்சங்கள் கொண்டிருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் எனவும் இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு

இதுகுறித்து ஜெர்மன் டெக்னிக் நியூஸ் கருத்துப்படி, மோட்டோரோலா ஐபிஜா ஸ்மார்ட்போன் மாதிரி எண் எக்ஸ்எஸ்டி 213337 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 720x1600 பிக்சல் தீர்மானம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

13 மெகாபிக்சல் செல்பி கேமரா

13 மெகாபிக்சல் செல்பி கேமரா

மோட்டோரோலா ஐபிஜா ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் இது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும். முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 13 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்ட்ரிகான் 400 சீரிஸ் எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்ட்ரிகான் 400 சீரிஸ் எஸ்ஓசி

மேலும் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் இயங்கும் எனவும் 5ஜி இயக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்ட்ரிகான் 400 சீரிஸ் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதேசமயத்தில் மோட்டோரோலா காப்ரி, கேப்ரிப் மற்றும் நியோ அகிய குறியீடு பெயர் ஸ்மார்ட்போன்களில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் மோட்டோரோலா பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Motorola Ibiza 5G May Launched in Q1 2021 with 90Hz Display and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X