மதி நுட்பம் வாய்ந்த வசதிகளை கொடுக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
மதி நுட்பம் வாய்ந்த வசதிகளை கொடுக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்!

பயனுள்ள தொழில் நுட்பத்தினை கொடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் சிறப்பான இடம் பெற்று இருக்கும் இந்த மோட்டோரோலா நிறுவனம் ஐ-940 ஸ்மார்ட்போனை ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு ஓஎஸ் வி2.1 எக்லர்ஸ் இயங்குதளத்தில் இயங்கும். மனிதனுக்கு எப்படி மூளையோ, அது போல ஸ்மார்ட்போனுக்கு பிராசஸர் மிக முக்கியம்.

இதன் மூலம் எந்த தகவல்களையும் அதி வேகத்தில் பெறலாம். அந்த வகையில் இதில் ஏஆர்எம் 1136ஜேஎப்-எஸ் 504 எம்ஏஎச் மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை வழங்கும்.

விடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர் வசதியும் இதில் இருப்பதால் பொழுதுபோக்கினை சிறப்பாக பயன்படுத்த முடியும். இன்டர்நெட் வசதியின் மூலம் உலகத்தினையே கைக்குள் கொண்டு வரும் வைபை தொழில் நுட்பத்தினை எளிதாக பெறலாம்.

இது போன்ற நவீன வசதிக்கு சப்போர்ட் செய்வதால், பேட்டரி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான பேட்டரி பேக்கப் வசதியுடன் உருவாக்கி உள்ளது மோட்டோ நிறுவனம். ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 1,820 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரிமூவபுல் வசதி கொண்ட பேட்டரி அதிக நேரம் நீடித்து பேச உதவும். புத்தம் புதிய படைப்பான இந்த ஐ-940 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்