ஓம் ரீம் க்ரீம்... ச்சூ... மோட்டோரோலா க்லீம்!

முன்னிலை வகிக்கும் பல சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல் நிறுவனங்களில் மோட்டோரோலா நிறுவனமும் ஒன்று. க்லீம் ப்ளஸ் என்ற புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைலை உருவாக்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம். 2.80 இஞ்ச் திரை வசதியை வழங்கும் என்பதால் எந்த தகவல்களையும் தெளிவாக பெற முடியும். இது 240 X 480 பிக்ஸல் திரை துல்லியத்திற்கு இந்த மொபைல் சப்போர்ட் செய்யும்.
இதன் 2 மெகா பிக்ஸல் கேமரா சிறந்த புகைப்படத்திற்கும், வீடியோ வசதிக்கும் துணை புரியும். இந்த கேமராவின் மூலம் டிஜிட்டல் சூம் வசதியினையும் பெற்று மகிழலாம். 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழி்ல் நுட்பங்களையும் பெறலாம்.
2.1 வெர்ஷன் புளூடுத் வசதியையும் தரும் இந்த மொபைலில் 16ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ளலாம். மல்டி ஃபார்மெட் வசதியை கொண்டுள்ள இந்த மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியையும் தரும்.
இதன் 750 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 4.81 மணி நேரம் டாக் டைமையும், 17.4 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும். 105 கிராம் எடை கொண்ட இந்த மொபைலில் டபிள்யூஏபி 2.0 பிரவுசர் தொழில் நுட்பமும் உள்ளது. இந்த மோட்டோரோலா க்லீம் ப்ளஸ் மொபைல் வாடிக்கையாளர்கள் வாங்க எளிதான விலை கொண்டதாக
இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications