Home
Mobile

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை.. கிடுகிடுவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி96 5ஜி (Motorola G96 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் (Flipkart Republic Day sale 2026) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த மோட்டோரோலா போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பான அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி96 5ஜி போனுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.16499 விலையில் வாங்கிவிட முடியும்.

கிடுகிடுவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி96 5ஜி அம்சங்கள் (Motorola G96 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் ,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் , 300Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த மோட்டோரோலா போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி96 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

பான்டோன் கிரீனர் பாஸ்ச்சர்ஸ் (PANTONE Greener Pastures), பான்டோன் ஆஷ்லீ ப்ளூ (PANTONE Ashleigh Blue), பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid), பான்டோன் டிரெஸ்டன் ப்ளூ (PANTONE Dresden Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

கிடுகிடுவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி96 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

5500mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா ஜி96 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G96 5G available at 9 percent discount in Flipkart Republic Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X