Home
Mobile

அதிர போகுது ஆர்டர்.. 6720mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி (Motorola g86 power 5g) ஸ்மார்ட்போன் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.900 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதிர போகுது ஆர்டர்.. ஆஃபரில் மோட்டோரோலா  5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (MOTOROLA G86 Power 5G specifications) : தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

அதுவும் 50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மேலும் 6720mAh பேட்டரி உடன் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA G86 Power 5G with 8GB RAM is available at 10 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X