Home
Mobile

குவியும் ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா ஜி85 5ஜி போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.16,999 விலையில் வாங்கிவிட முடியும்.

குவியும் ஆர்டர்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள் (Motorola G85 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits peak brightness) மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி85 5ஜி போன் வெளிவந்தது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா ஜி85 5ஜி வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) ஆதரவுகளும் இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போனில் உள்ளன.

குவியும் ஆர்டர்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G85 5G with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X