Motorola 5ஜி போனை ஆஃபரில் வாங்க சரியான நேரம்.. சோனி கேமரா.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவில் சாம்சங், விவோ, ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் மோட்டோரோலா போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள் (Motorola G85 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits peak brightness) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி85 5ஜி போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
மோட்டோரோலா ஜி85 5ஜி போன் 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
அதுவும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன்.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications