Home
Mobile

ஜனவரி 14.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. தள்ளுபடி விலையில் கிடைக்கும் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

ஜனவரி 14-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை (Flipkart Republic Day Sale) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் மிகவும் எதிர்பார்த்த மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் இந்த போன் ரூ.15,999 விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ஜனவரி 14.. தள்ளுபடி விலையில் கிடைக்கும் மோட்டோரோலா 5ஜி போன்..

மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள் (Motorola G85 5G specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி85 5ஜி போன் வெளிவந்தது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா ஜி85 5ஜி வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி போன்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits peak brightness) மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,),
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) ஆதரவுகளும்
இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போனில் உள்ளன.

ஜனவரி 14.. தள்ளுபடி விலையில் கிடைக்கும் மோட்டோரோலா 5ஜி போன்..

மேலும் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் இதில் உள்ளது. அதுவும் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த ஆண்டு மோட்டோரோலா நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G85 5G phone to get discount in Flipkart Republic Sale : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X