பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ரூ.14,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. pOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Motorola 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் கோட் சேல் 2025 (Flipkart GOAT Sale 2025) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அந்த வகையில் மோட்டோரோலா ஜி85 5ஜி மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
தற்போது பிளிப்காரட் தளத்தில் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஸ்மார்ட்போன் மாடல் ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள் (Motorola G85 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits peak brightness) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி85 5ஜி போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
மோட்டோரோலா ஜி85 5ஜி ஆனது 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன்.

அதுவும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன்.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.


Click it and Unblock the Notifications








