Home
Mobile

மிரட்டும் மோட்டோரோலா.. 50எம்பி டூயல் ரியர் கேமரா.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வகம் காட்டுகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு அட்டகாசமான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஜி84 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இணையதளத்தில் வெளியான இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிரட்டும் மோட்டோரோலா.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். அதேபோல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனின் டிசைன் மிகவும் அருமையாக உள்ளது.

மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக கொரோனெட் (Coronet), அம்ரோசியா (Amrosia), அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) மற்றும் பாலட் ப்ளூ (Ballad Blue) நிறங்களில் இந்த போன் வெளிவரும்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி54 5ஜி எனும் ஸ்மார்ட்போனை கூட அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மோட்டோ ஜி54 5ஜி போன் தற்போது பிஐஎஸ் (BIS) இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இணையதளத்தில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம். 50எம்பி குவாட் பிக்சல் (Quad Pixel)பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு அறிமுகமாகும் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.. மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

மிரட்டும் மோட்டோரோலா.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் டால்பி அட்மோஸ்(Dolby Atmos)மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 13 (Android 13)இயங்குதளத்தைக் கொண்டு அறிமுகமாகும் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 5640எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதுதவிர கைரேகை ஸ்கேனர், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G84 5G with 50MP OIS camera will be launched soon: Check Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X