பட்ஜெட் விலை.. 50MP கேமரா, 12GB ரேம், 5000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வந்த MOTOROLA போன். எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ஜி84 5ஜி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா ஜி84 5ஜி விலை: 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி84 5ஜி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி விற்பனைக்கு வரும் இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மோட்டோரோலா ஜி84 5ஜி அம்சங்கள் (Motorola g84 5G specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU)இந்த போனில் உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மோட்டோ ஜி84 5ஜி போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
குறிப்பாக3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் எனப் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும்ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.
5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 168.3 கிராம் ஆகும். குறிப்பாக இந்த போன் விவா மெஜந்தா மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ ஆப்ஷன்கள் லெதர் ஃபினிஷ் கொண்டிருக்கும். அதே சமயம் மிட்நைட் ப்ளூ வகை கண்ணாடி போன்ற மெட்டீரியலைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








