விஸ்வரூப விற்பனை.. 49 சதவீத ஆஃபரில் Moto 5G ஸ்மார்ட்போன்.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 (Flipkart Big Billion Days 2026) விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் மோட்டோரோலா ஜி77 பவர் (Motorola g77 Power) ஸ்மார்ட் போன் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 49 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே ரூ.21,249 விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,244 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,005 விலையில் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

மோட்டோரோலா ஜி77 பவர் அம்சங்கள் (Motorola g77 Power Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் ஆக்டா கோர் சிப்செட் (MediaTek Dimensity 6400 6nm Octa Core) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) உடன் இந்த மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
2400 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பீச்சர்கள் இதில் உள்ளன. குறிப்பாக, டிஸ்பிளே புரொடெக்சன் கொடுக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
மேலும், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) அப்டேட்டையும் பெற முடியும். கேமராவைப் பொறுத்தவரை, சோனி லைட்டியா 600 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா அடங்கிய டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும், 2-இன்-1 லைட் சென்சார் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் 2K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, 7000mAh பேட்டரி மற்றும் 30W டர்போபவர் சார்ஜிங் (TurboPower Charging) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி வசதியை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. இந்த மாடல் 8.89 மிமீ தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொண்டுள்ளது. மற்ற பீச்சர்களை பொறுத்தவரை, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) இடம்பெற்றுள்ளன. இந்த மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும், MIL-STD-810H சர்டிபிகேஷன் மூலம் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இம்பெனிட்ரேபிள் (Impenetrable), நாட்டிகல் ப்ளூ (Nautical Blue) மற்றும் ஃபியூஷியா ரெட் (Fuchsia Red) ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் கேமரா அவுட்புட் மட்டுமல்லாமல், கூடவே கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பேட்டரி சிஸ்டம் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த மோட்டோரோலா ஜி77 பவர் பக்காவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
