தித்திக்கும் தீபாவளி ஆஃபர்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. Motorola 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Bang Diwali Sale 2026 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி77 பவர் (Motorola g77 Power) ஸ்மார்ட்போனுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா ஜி77 பவர் அம்சங்கள் (Motorola G77 Power Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 1050 நிட்ஸ் HBM பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி Sony LYTIA 600 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2-இன்-1 லைட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
அதுவும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி77 பவர் மாடல்.

3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack), எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications
