அடுத்த Motorola 5ஜி போன் ரெடி.. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சமீபத்தில் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி (Motorola G86 Power 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி (Motorola G67 Power 5G) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா.
அதாவது மோட்டோரோலா நிறுவனம் வரும் மாதங்களில் மோட்டோரோலா ஜி87 பவர் 5ஜி (Motorola G67 Power 5G) போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகுறிது. இந்நிலையில் மோட்டோரோலா ஜி87 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Motorola G67 Power 5G Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் இந்த மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் இந்த மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். தற்போது இந்த மோட்டோரோலா போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி போனின் அம்சங்களை பார்க்கலாம்.
மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Motorola g86 Power 5G specifications) : 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
பான்டோன் காஸ்மிக் ஸ்கை (PANTONE Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (Pantone Golden Cypress), பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (Pantone Spellbound) நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.
photo credit: tamindir, motorola


Click it and Unblock the Notifications








