Home
Mobile

பிளிப்கார்ட் ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. குறைந்த விலையில் Motorola 5ஜி போன்..

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் ஆஃபர்.. குறைந்த விலையில் Motorola 5ஜி போன்..

மோட்டோரோலா ஜி64 5ஜி அம்சங்கள் (Motorola G64 5G Specifications): மோட்டோரோலா ஜி64 5ஜி போன் 6.5-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

தரமான ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (Octa Core 6nm MediaTek Dimensity 7025)சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இதில் ஐஎம்ஜி பிஎக்ஸ் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்படேட்கள் கிடைக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging) வசதியும் உள்ளது.

குறிப்பாக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் மின்ட் கிரீன் (Mint Green), பேர்ல் ப்ளூ (Pearl Blue), ஐஸ் லைலாக் (Ice Lilac) ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Motorola G64 5G with 8GB RAM price slashed on flipkart sale: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X