நாளை விற்பனைக்கு வரும் புது Motorola 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி.. எந்த மாடல்? என்ன விலை?
கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஜி57 பவர் (Motorola G57 Power) ஸ்மார்ட்போன் ஆனது நாளை முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. அதாவது இந்த புதிய போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா ஜி57 பவர் அம்சங்கள் (Motorola G57 Power Specifications): மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
குறிப்பாக மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒடி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) ஆகிய கேமரா கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளன.
தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
7000mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6.802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-ச் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. பான்டோன் ரெகாட்டா, பான்டோன் கோர்செயர், PANTONE Fluidity நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி57 பவர் போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் வங்கி சலுகை மற்றும் சிறப்பு அறிமுக தள்ளுபடியும் சேர்த்து இந்த போன் 12,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சலுகை சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.


Click it and Unblock the Notifications








