Flipkart பிச்சிக்குது.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்(Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மிகவும் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பிளிகார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பர்ரத்த மோட்டோரோலா போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மோட்டோரோலா ஜி54 5ஜி (MOTOROLA g54 5G) ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்( dynamic refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இந்த அசத்தலான மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம். மேலும் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும். அதேபோல் சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

6000எம்ஏஎச் பேட்டரி வசதி மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








