Home
Mobile

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.10000 பட்ஜெட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ரூ.10000 பட்ஜெட்டில் வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் டிஸ்பிளே, 128 மெமரியுடன் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் சப்போர்ட் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பேக் செய்துள்ள மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) போன் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த மோட்டோவின் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

மோட்டோ பிரியர்கள் வேகன் லெதர் பேனல் மாடலை கம்மி பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், கூடுதல் பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த மோட்டோரோலா ஜி45 5ஜி போனுக்கு தாராளமாக செல்லலாம். ஏனென்றால், டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சனை பேக் செய்துள்ளது. ஆகவே, டியூரபிலிட்டி பக்காவாக இருக்கும்.

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.10000 பட்ஜெட்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

மேலும், விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போக 20W சார்ஜர் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. அல்ட்ரா கிளியர் பிக்சல் டீடெயில்களுக்காக குவாட் பிக்சல் டெக்னாலஜி வருகிறது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G Specifications): இந்த மோட்டோரோலா போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 5ஜி சிப்செட்டை கொடுக்கிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் எஸ்ஓசி கொண்டிருக்கிறது.

இந்த சிப்செட்டை போலவே மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மாடல்களில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.10000 பட்ஜெட்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

டிஸ்பிளேவும் சொல்லி கொள்ளும்படி இருக்கிறது. ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.5 இன்ச் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. அதேபோல 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. குவாட் பிக்சல் கொண்ட 50 எம்பி கேமரா வருகிறது.

மேலும், 2 எம்பி மேக்ரோ கொண்ட டூயல் ரியர் செட்டப் உள்ளது. இந்த மோட்டோரோலாவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. 8.03 எம்எம் தடிமனிலும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W சார்ஜர் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், ஹை-ரெட் ஆடியோ கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

லெதர் பேக் கொண்ட பிரில்லியன்ட் ப்ளூ, பிரில்லியன்ட் கிரீன் மற்றும் விவா மெஜந்தா ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோரோலாவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. ரூ.1000 டிஸ்கவுண்ட்டில் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,999 விலையில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Motorola G45 5G With 50MP Camera Gets 20 Percent Discount in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X