ஆரம்பமே ஆஃபர்.. 50எம்பி கேமரா.. டால்பி அட்மாஸ்.. நாளை விற்பனைக்கு வரும் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் முதல் முறையாக நாளை (ஆகஸ்ட் 28) பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் சலுகையுடன் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய மோட்டோரோலா ஜி45 5ஜி போன். குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. சரி இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோரோலா ஜி45 5ஜி விலை மற்றும் சலுகைகள்: 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.12,999 விலையில் விற்பனைக்கு வரும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.9,999 விலையில் இந்த புதிய போனை வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா ஜி45 5ஜி அம்சங்கள் (Motorola G45 5G Specifications): 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன்புரொடெக்சன் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
தரமான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன்.
மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் மோட்டோரோலா ஜி45 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் 8 ஜிபிக்கான ரேம் பூஸ்டர் (RAM Booster) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். குறிப்பான இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup)கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology)மற்றும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
IP52 ஃஸ்ளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)
உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி45 5ஜி போன். மேலும்வேகன் லெதர் பேக் பேனல் டிசைனில் பிரில்லியன்ட் ப்ளூ (Brilliant Blue), பிரில்லியன்ட் கிரீன் (Brilliant Green) மற்றும் விவா மெஜந்தா (Viva Magenta) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டால்பி அட்மாஸ், 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மற்றும் சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெறும் ரூ.9,999-க்கு கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








