Home
Mobile

64MP கேமரா, 6000mAh பேட்டரி: MOTOROLA ஜி40 ஃபியூஷன் விலை அதிரடியாக குறைப்பு.!ஆளுக்கொரு போன் பார்சல்!

மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த போன்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்ததுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. அதாவது மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் (MOTOROLA G40 Fusion) ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசான் தளத்தில் 40 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

MOTOROLA ஜி40 ஃபியூஷன் விலை அதிரடியாக குறைப்பு!

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஆனது முன்பு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் வழங்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2460 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது வெளிவந்துள்ளது இந்த போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

MOTOROLA ஜி40 ஃபியூஷன் விலை அதிரடியாக குறைப்பு!

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA G40 Fusion with 6GB RAM is available at discounted price on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X