வீட்டுக்கு 2 ஆர்டர்.. 43 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி MOTOROLA போன்.. 30W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனை நடந்துவருகிறது. இந்த விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி சீரிஸ் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் மோட்டோ ஜி37 பவர் (MOTOROLA g37 power) மாடலும் நேரடி தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி37 பவர் ஸ்மார்ட்போனுக்கு 43 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுபோக தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.13,999 விலைக்கு இந்த மோட்டோரோலா ஜி37 பவர் மாடலை வாங்கலாம்.

மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால், ரூ.1,700 தள்ளுபடி கிடைக்கும். பான்டோன் இம்பெனட்ரபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ (Pantone Nautical Blue) மற்றும் பான்டோன் ஃகாப்ரி (Pantone Capri) ஆகிய மூன்று கலர்களில் மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி37 பவர் அம்சங்கள் (MOTOROLA g37 power Specifications): குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera) இந்த மோட்டோரோலா ஜி37 பவர் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 6X டிஜிட்டல் ஜூம் மற்றும் பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்படவில்லை. இருப்பினும், எலக்ட்ரானிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன் (Electronic Video Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture), ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
நைட் விஷன் மோட் (Night Vision Mode) கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.89 எம்எம் தடிமன் பாடியில் 7000mAh பேட்டரியை இந்த மோட்டோரோலா ஜி37 பவர் ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 215 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் மட்டுமல்லாமல், ஆர்ம் மாலி ஜி57 எம்பி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கொடுக்கும்படி லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications