Home
Mobile

வெளுக்குது ஆர்டர்.. 2026 ஆஃபரில் ரூ.9,499 க்கு 5000mAh பேட்டரி, 50MP கேமரா.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இப்போது, 2026 புது வருட ஆஃபர் கிடைப்பதால் மேலும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத கம்மி விலைக்கு மோட்டோரோலா ஜி35 5ஜி (MOTOROLA g35 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 16 சதவீத டிஸ்கவுண்ட் போக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வாங்க கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் கிடைப்பதால், ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,499 விலைக்கு இந்த மோட்டோரோலா போனை வாங்கி கொள்ளலாம்.

வெளுக்குது ஆர்டர்.. 2026 ஆஃபரில் ரூ.9,499 க்கு 5000mAh பேட்டரி மாடல்!

மோட்டோரோலா ஜி35 5ஜி அம்சங்கள் (MOTOROLA g35 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட்டை இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், மாலி ஜி57 எம்சி4 ஜிபியு (Mali G57 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவையும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனையும் கொடுத்துள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது.

மேலும், ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10 (HDR10) இந்த டிஸ்பிளேவுக்கு கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுத்துள்ளது. மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் பிடிஏஎப் (PDAF) போகஸ் கிடைத்துள்ளது.

மேலும், அல்ட்ரா வைடு கேமராவுக்கு பிக்சடு போகஸ் கிடைத்துள்ளது. அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ரியர் கேமாவில் யுஎச்டி (UHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ கேமராவுக்கு ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஸ்லோவ் மோஷன், வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் வீடியோ ஸ்னாப்ஷாட் கொண்டுள்ளது.

ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), ப்ரோ மோட் (Pro Mode), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture), நைட் விஷன் (Night Vision), லைவ் பில்டர்கள் (Live Filter), ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization), கூகுள் போட்டோ ஆட்டோ என்ஹான்ஸ் (Google Photos Auto Enhanc), ராவ் போட்டோ அவுட்புட் (RAW Photo Output) மற்றும் 6X ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.

செல்பீ கேமராவுக்கு பியூட்டி (Beauty), போர்ட்ராய்டு (Portrait), செல்பீ போட்டோ மிரர் (Selfie Photo Mirror) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெப்பலென்ட் கிடைக்கிறது. 5ஜி, 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. லீப் கிரீன் (Leaf Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் குவாவா ரெட் (Guava Red) கலர்கள் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA g35 5G 4GB RAM Available At Discounted Price in New Year 2026 Sale on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X