இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.9499 போதும். 50எம்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அசத்தலான மோட்டோரோலா ஜி34 5ஜி (Motorola G34 5G)போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டால்பி அட்மாஸ், ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா ஜி34 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இப்போது மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.9499 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா ஜி34 5ஜி அம்சங்கள் (Motorola G34 5G Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது மோட்டோரோலா போன். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.
அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14 ) இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி34 5ஜி போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி34 5ஜி போன். இந்த ரியர் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கூட உள்ளது.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ மோட் (Pro Mode), ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), ப்ரோ மோட், பேஸ் ரீடச் (Face Retouch), ஆக்டிவ் போட்டோஸ் (Active Photos) போன்ற கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இதில் உள்ளன.

அதேபோல் IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் சப்போர்ட் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) வசதி இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி போன்ற கனெக்டிவிட்டி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். சார்கோல் பிளாக் (Charcoal Black), ஐஸ் ப்ளூ (Ice Blue), ஓசன் கீரின் (Ocean Green) நிறங்களில் இந்த போன் வாங்கக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








