Home
Mobile

பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலைகுறைப்பு: என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் பிரபலமான மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தான் விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதாவது இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதாவது ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

38 சதவீதம் தள்ளுபடி
தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் முன்பு ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.10,499-விலையில் வாங்கக் கிடைக்கிறது.

பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலைகுறைப்பு.!

என்னென்ன அம்சங்கள்

மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 x 1080 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலைகுறைப்பு.!

மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலைகுறைப்பு.!

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.

பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலைகுறைப்பு.!

4ஜி எல்இடி, வைஃபை, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்.

Best Mobiles in India

English summary
Motorola G32 smartphone on sale at 38 percent discount : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X