Home
Mobile

ரொம்ப ரொம்ப கம்மி விலை.. 50MP கேமரா, டால்பி அட்மோஸ்.. அடுத்த மாதம் வரும் புதிய Motorola போன்.!

மோட்டோரோலா நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய மோட்டோரோலா ஜி14 (Motorola G14) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த மோட்டோரோலா ஜி14 போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும்.

அதாவது ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா, அருமையான பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோரோலா ஜி14 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

50MP கேமரா, 5000mAh பேட்டரி.. அடுத்த மாதம் வரும் புதிய Motorola போன்.!

மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவரும். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

குறிப்பாக யுனிசாக் டி616 (Unisoc T616) சிப்செட் உடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13( Android 13) இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன். அதாவது போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மேலும் மோட்டோரோலா நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின்படி, இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்றும், 3 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி14 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

50MP கேமரா, 5000mAh பேட்டரி.. அடுத்த மாதம் வரும் புதிய Motorola போன்.!

இந்த போனில் தரமான பல அம்சங்கள் உள்ளன. ஆனால் இதில் 5ஜி வசதி இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி ஆதரவுடன் அறிமுகமாகும். பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.

குறிப்பாக இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10,000-விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கம்மி விலையில் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதேபோல் இந்த போனின் முன்பதிவு ஆகஸ்ட் 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G14 to launch in India on August 1: check specifications price: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X