Home
Mobile

50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. புதிய Motorola போனின் அறிமுக தேதி மற்றும் விலை வெளியானது..

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அசத்தலான அம்சங்களுடன் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஜி14 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இந்த போன் ரூ.10,000 அல்லது ரூ.11,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிரும். ஆன்லைனில் வெளியான இந்த மோட்டோரோலா ஜி14 போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய மோட்டோரோலா போனின் அறிமுக தேதி மற்றும் விலை வெளியானது.!

மோட்டோரோலா ஜி14 (Motorola G14) ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி14 இந்தியாவில் அறிமுகமாகும்.

யுனிசாக் டி616 (Unisoc T616) சிப்செட் உடன் அறிமுகமாகும் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இருந்தபோதிலும் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கூட கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போனுக்கு 3 வருட பாதுகாப்பு அப்டேட்களை உறுதி செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி14 போன். எனவே இந்த போன் ஒரு நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் . அதேபோல் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் இந்தியாவில் வெளிவரும்.

புதிய மோட்டோரோலா போனின் அறிமுக தேதி மற்றும் விலை வெளியானது.!

ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G14 smartphone specifications and price released online: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X