Home
Mobile

அள்ளி தரும் பிளிப்கார்ட்.. ரூ.6,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5200mAh பேட்டரி.. IP52 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி05 (Motorola G05) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (flipkart) சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மோட்டோரோலா போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி05 போனுககு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரு 6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி தரும் பிளிப்கார்ட்.. ரூ.6999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா! எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி05 அம்சங்கள் (Motorola G05 Specifications): தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி05 போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி05. மேலும் ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி05 ஸ்மார்ட்போன். மேலும் இதில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி05 போன்.

மோட்டோரோலா ஜி05 ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த மோட்டோரோலா ஜி05 போனில் உள்ளன.

5200mAh பேட்டரி உடன் இந்த மோட்டோரோலா ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA g05 with 4GB RAM available at a discounted price: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X