பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ரூ.6,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Motorola போன்..
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி04 (Motorola G04) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டால்பி அட்மாஸ், 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோரோலா ஜி04 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி04 ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா ஜி04 அம்சங்கள் (Motorola G04 specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி04 போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி (269ppi pixel density) மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) ஆகிய அம்சங்கள் உள்ளன.
மோட்டோரோலா ஜி04 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி606 சிப்செட் (UniSoC T606 SoC) உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) மூலம் மோட்டோரோலா ஜி04 இயக்கப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். மேலும் இந்த போன் டால்பி அட்மாஸ் ஆதரவு (Dolby Atmos Support) உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் (Stereo speakers) கொண்டுள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் மோட்டோரோலா ஜி04 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கேமராக்களை பொறுத்தவரை எல்ஐடி பிளாஷ் (LED Flash) உடனான 16 மெகாபிக்சல் ரியர் கேமராவையும், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி04 ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
குறிப்பாக மோட்டோரோலா ஜி04 ஸ்மார்ட்போன் ஆனது 10W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Fingerprint sensor) உள்ளது.. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (Dust and splash) எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கை (IP52 Rating) பெற்றுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications