Motorola களமிறக்கும் புதிய 5ஜி போன்.. சோனி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ஜி மேக்ஸ் (Motorola G Max) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 15-க்குள் இந்த புதிய மோட்டோரோலா ஜி மேக்ஸ் போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும்.
அதுவும் மோட்டோரோலா ஜி மேக்ஸ் மாடல் ஏற்கனவே பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த மோட்டோரோலா ஜி மேக்ஸ் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா ஜி மேக்ஸ் அம்சங்கள் (Motorola G Max Specifications): 6.8-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1272 x 2772 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மாரட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
50எம்பி Sony LYT-600 மெயின் ரியர் கேமரா உடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அஸுல் கார்லோ மற்றும் கிராஃபைட் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
6000எம்ஏஎச் அல்லது 7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமா சார்ஜ் செய்துவிட முடியும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோரோலா ஜி மேக்ஸ் மாடல் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications