மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி குறித்து லீக்கான அம்சங்கள்: இதோ முழு விவரங்கள்!
பஞ்ச் ஹோல் செல்பி கேமரா வடிவமைப்பு, மூன்று பின்புற கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்களோடு மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முழு விவரங்களை பார்க்கலாம்.

புதிய மோட்டோ G 5ஜி ஸ்மார்ட்போன்
மோட்டோரோலாவுன் புதிய மோட்டோ G 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது. மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி செயலி மூலம் இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி 5ஜி என்பது மோட்டோ ஜி 5ஜி பிளஸ்-ன் வெண்ணிலா மாறுபாடாகும். இது கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போனில் செல்பி கேமராவிற்கு பஞ்ச் ஹோல் கட்அவுட் இருக்கும் எனவும் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மோட்டோ ஜி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி செயலியுடன் வரும் என்ற தகவல் ஆரம்பத்தில் வெளியானது. இருப்பினும் டெக்னிக் செய்தியின் சமீபத்திய அறிக்கைப்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. மோட்டோ ஜி 5ஜி 6.66 இன்ச் 1,080x2,400 பிக்சல் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு இருக்கும் என எக்ஸ்எக்ஸ்டிஏ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கும் எனவும் முன்பக்கத்தில் மோட்டோ ஜி 5ஜி 16 மெகாபிக்சல் கேமரா இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி
5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கப்படும் எனவும் இதில் கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்ச் ஹோல் செல்பி கேமரா
மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் கியேவ் என்ற குறியீட்டோடு வரும் எனவும் மோட்டோ ஜி 5ஜி பார்ப்பதற்கு மிகவும் மெலிதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதியில் பஞ்ச் ஹோல் செல்பி கேமரா இருக்கும்படியான புகைப்படம் லீக்காகியுள்ளது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவாக எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி இருக்கும். லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோராலோ மோட்டோ ஜி 5ஜி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications