Flipkart-ல் சறுக்கிய விலை.. 7000mAh பேட்டரி கொண்ட Motorola 5ஜி போன் மீது முரட்டு ஆபர்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் மே 9 ஆம் தேதி முதல் தொடங்கும் சாசா லேலே (Sasa Lele) விற்பனையின் ஒரு பகுதியாக, மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் உட்பட மொத்தம் 5 மாடல்கள் மீது தள்ளுபடிகளை அறிவித்து உள்ளது.
அந்த 5 ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், எட்ஜ் 60 ப்ரோ போன்ற பிரபலமான மாடல்களும், பட்ஜெட் விலைப்பிரிவில் உள்ள மோட்டோ ஜி-சீரிஸ் மற்றும் பிரீமியம் விலைப்பிரிவில் உள்ள மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலும் அடங்கும். சரி வாருங்கள் எந்த மாடல் மீது எவ்வளவு தள்ளுபடி என்று பார்த்துவிடலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன் (Motorola Edge 70 Fusion) ஆபர்: மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.2,000 தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கும். இதன் மூலம் இதன் விலை ரூ.26,999 இல் இருந்து ரூ.24,999 ஆக குறையும்
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன் முக்கிய அம்சங்கள்: இது 50எம்பி ப்ரைமரி கேமரா, 7000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் மற்றும் 144ஹெர்ட்ஸ் 1.5K பேன்டோன்-வேலிடேடட் குவாட்-கர்வ்டு டிஸ்பிளே ஆகியவற்றை கொண்ட ஒரு திறன்மிக்க மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன் ஆகும்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஆபர்: கடந்த ஆண்டு வெளியான மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது, இதன் அசல் விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ முக்கிய அம்சங்கள்: இது 1.5கே pOLED குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே, 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,000mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் சிப்செட் ஆகியவற்றால் தனித்து நிற்கிறது. இதன் தனித்துவமான அம்சம், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகும். இது ரூ.30,000-க்கும் குறைவான விலையில் மிகவும் அரிதான ஒரு அம்சமாகும்.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஆபர்: மோட்டோரோலா நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா சிக்னேச்சர் ஆனது, வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது, ரூ.57,499 க்கு (12GB + 256GB) வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,999 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மோட்டோரோலா சிக்னேச்சர் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், ஒரு பெரிய 6.8-இன்ச் FHD+ டிஸ்பிளே, பெரிஸ்கோப் 3எக்ஸ் லென்ஸுடன் கூடிய 50எம்பி டிரிபிள்-கேமரா செட்டப் மற்றும் 5,200mAh பேட்டரி ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு பிரீமியம் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும். பல்துறை கேமராக்கள் மற்றும் ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் பிரீமியம் தோற்றமுடைய போனை விரும்புபவர்களுக்கு இதுவொரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்.
மோட்டோரோலா ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்: புதிய மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போனும் மீதும் தள்ளுபடி கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசஸர், 4கே ரெக்கார்டிங் வசதியுடன் கூடிய 50MP சோனி லிடியா கேமரா மற்றும் 7,000mAh பேட்டரியுடன், சிறந்த செயல்திறனை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்ட இந்த மாடல் பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கு (ரூ.500 தள்ளுபடி) வாங்க கிடைக்கும்.
இதேபோல குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள், மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனின் மீதான ஆபரை பயன்படுத்தி கொள்ளலாம். 144ஹெர்ட்ஸ் கர்வ்டு pOLED பேனல் மற்றும் OIS உடன் கூடிய 50MP சோனி லிடியா 700C கேமராவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,000 தள்ளுபடிக்கு பிறகு, ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications