சூப்பர் சான்ஸ்.. ரூ.500, ரூ.1000 இல்ல.. முழுசா ரூ.10,000 விலை குறைப்பை பெற்ற 2 Motorola போன்கள்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் 2 பிரபலமான ஃபிளிப் போன்கள் (Flip Phones) மீது ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் பழைய விலை என்ன? தள்ளுபடிக்கு பிறகான புதிய விலை என்ன? அவைகள் என்னன்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) மற்றும் மோட்டோரோலா ரேஸர் 40 (Motorola Razr 40) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். மோட்டோரோலா நிறுவனத்தின் இவ்விரு கிளாம்ஷெல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் (Clamshell Foldable Smartphones) மீது ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய விலை VS புதிய விலை: மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா மற்றும் ரேஸர் 40 ஆகியவற்றின் மீதான தள்ளுபடி கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.89,999 க்கு அறிமுகமானது. மறுகையில் உள்ள மோட்டோரோலா ரேஸர் 40 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின்கீழ் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் அசல் வெளியீட்டு விலை ரூ.59,999 ஆகும்.

அல்ட்ரா மாடலானது இன்ஃபினைட் பிளாக் மற்றும் விவா மெஜந்தா என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மறுகையில் உள்ள மோட்டோரோலா ரேஸர் 40 மாடலானது சேஜ் க்ரீன் (Sage Green), சம்மர் லிலாக் (Summer Lilac) மற்றும் வெண்ணிலா க்ரீம் (Vanilla Cream) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலாவின் இந்த ரூ.10,000 தள்ளுபடியானது வருகிற டிசம்பர் 24 வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது மோட்டோ டேஸின் (Moto Days) என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடி (Limited-period discount) ஆகும்.

மோட்டோரோலா ரேஸர் 40, ரேஸர் 40 அல்ட்ராவின் அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) அடிப்படையிலான மையுஎக்ஸ் (MyUX)கொண்டு இயங்குகின்றன. அல்ட்ரா மாடலானது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் FHD+ ஃபோல்டபிள pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3.6-இன்ச் (1056 x 1066 பிக்சல்ஸ்) pOLED அவுட்டர் பேனலையும் கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள மோட்டோரோலா ரேஸர் 40 மாடலானது 6.9-இன்ச் FHD+ pOLED மெயின் டிஸ்பிளே மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 1.5-இன்ச் OLED அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அல்ட்ரா மாடலானது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை கொண்டுள்ளது, அதேசமயம் மோட்டோரோலா ரேஸர் 40 மாடலானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது.
இரண்டு மாடல்களிலுமே டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளன.ரேஸர் 40 அல்ட்ராவில் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 12 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. ரேஸர் 40 மாடலில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை, இரண்டுமே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளன.
மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ராவானது 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 3,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரேஸர் 40 மாடலானது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,200mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேடிங்கையும் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








