Home
Mobile

இலகு எடையுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: மோட்டோரோலா அறிமுகம்

By Super
இலகு எடையுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: மோட்டோரோலா அறிமுகம்
மோட்டரோலா நிறுவனம் மேலும் ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

எக்ஸ்டி-316 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் 2.5 இஞ்ச் அளவு தொடுதிரையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தக் காட்சியும் துல்லியமாகவும், முழுமையாகவும் பார்க்க முடியும்.

இது 600 மெகாஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் 200 மெகாஹெர்ட்ஸ் கிராபிக்ஸ் ப்ராசஸர் மற்றும் கோள்காம் எம்எஸ்எம் சிப்காட்டும் தோளோடு தோள் நிற்கும் என்பதால், ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் புதிய வேகத்தில் இயக்க முடியும்.

மோட்டோ இன்டர்ஃபேஸ் யுட்டிலிட்டி உள்ள திரை அம்சமும் கொண்டுள்ளது.கிவெர்ட்டி கீபேட் வசதியும் கொண்டுள்ளது.இந்த எக்ஸ்டி-316 மாடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்படிப்பட்ட நுட்பமான வடிவமைப்பை நிச்சயம் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் மட்டுமே வழங்கமுடியும். அப்படிப்பட்ட கைதேர்ந்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த புதிய மாடல்.இதில், 3.2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தை இனிமையாக கழிக்க எஃப்எம் ரேடியோவும் உள்ளது.

256 எம்பி ரேம், 512எம்பி அளவு ரோம் சப்போர்ட்டை கொண்டுள்ளது. சில மாடல்களில் போதுமான அளவு ஸ்டோரேஜ் வசதி இருக்காது.ஆனால் இந்த புதிய மாடல் உங்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு சேமிப்புத் திறன் கொண்டது.

மற்றும் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள 32 ஜிபி அளவு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீடியோ வசதிஇருப்பதால் அனைத்து வீடியோக்களையும் இதில் முழுமையாகக் காண முடியும்.

இந்த போனில் எம்பி3,எம்பி4, டபல்யுஎம்ஏ, டபல்யுஎம்வி, 3ஜிபி போன்ற மல்டி ஃபார்மெட் இசைக்கேட்கும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளதால் விரும்பிய பாடலை உங்களால் கேட்க முடியும்.

எக்ஸ்டி-316 மிகவும் எளிய முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதில் உள்ள புளூடூத் மற்றும் வைஃபை 802.11/b/g/n தகவல் பரிமாற்ற வசதியை வழங்கும்.

இந்த ஹேண்ட்செட் 3ஜி,ஹெச்எல்டிபிஎ மற்றும் ஹெச்எல்யுபிஎ போன்ற வசதிகளுக்கும் ஸப்போர்ட் செய்கிறது.

இதில் உள்ள யூஎஸ்பி மூலம் எதையும் சுலபமாக கணினியில் இருந்து உங்கள் கைப்பேசிக்கு பதிவேற்றம் செய்ய முடியும்.

இதில், லித்தியான் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் சார்ஜ் பற்றிய படபடப்பை தூர விரட்டும். நீண்ட காலம் உழைக்கும் தன்மையையும் கொண்டது. இது, 9 மணி 16 நிமிடங்கள் வரை டாக் டைம் வசதி கொடுக்கிறது.

3ஜி நெட்வொர்க் வசதியை பயன்படுத்தினால் 8 மணி நேரம் டாக்டைம் கொடுக்கும். வெறும் 110 கிராம் எடையைக்கொண்டுள்ளதால் சுலமாக எடுத்துச்செல்லலாம். அனைத்து வசதிகளும் கொண்ட எக்ஸ்டி-316 மாடல் ரூ.8,800 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X