Home
Mobile

வாங்குனா இந்த போன் வாங்கனும்: தரமான சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன்

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் 10 பிட் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 700 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன்

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 4என்எம் சிப்செட் வசதியுடன் அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MYUI 3.0சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன்

இந்த மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன்

புதிய மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 68 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ன்எஸ்ஏ, டூயல் 4ஜி, வைஃபை

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி, வைஃபை 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் எடிஷன் ஸ்மார்ட்போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, டால்பி அட்மோஸிற்கான ஆதரவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ்30 சாம்பியன் ஸ்மார்ட்போனின் விலை CNY 3299 (இந்திய மதிப்பில் ரூ.37,900) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge X30 Champion Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X