விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் மோட்டோரோலா எட்ஜ் எஸ்30
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில்
வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30
மேலும் மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.78-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்இ 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 12
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோ ஜி31

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மாடல். புதிய மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் Arm Mali-G52 MC2 GPUஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், நைட் விஷன், போர்ட்ரெய்ட், லைவ் ஃபில்டர், ஏஆர் ஸ்டிக்கர்கள், ப்ரோ மோட் என பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications