Home
Mobile

ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்டபோன் மாடல் வரும் டிம்சபர் 21-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ்30

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் விலை RMB 1,999 (இந்திய மதிப்பில் ரூ.23,692) ஆக உள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் விலை RMB 2,199 (இந்திய மதிப்பில் ரூ.26,062) ஆக உள்ளது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஅர் + பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30

இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக உதவும் என்றே கூறலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ, புகைப்படங்கள் எடுக்க முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30

மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புளூடூத் 5.2, என்எப்சி, உள்ளிட்ட

வைஃபை, புளூடூத் 5.2, என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge S30 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X