மிரட்டலான மோட்டோரோலா எட்ஜ் எஸ் மாடல்.. மோட்டோரோலா ஜி 100 ஆகதான் உலகளவில் வெளியாகுமா?

|

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் எஸ் (Motorola Edge S) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. மோட்டோரோலா எட்ஜ் எஸ் இன் உலகளாவிய பதிப்பாக 'மோட்டோரோலா ஜி 100' (Motorola G100) என்ற ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளதானால், உலகளாவிய வெளியீட்டிற்கு நிறுவனம் தயாராவது போல் தெரிகிறது.

மோட்டோரோலா எட்ஜ் எஸ்

மோட்டோரோலா எட்ஜ் எஸ்

சமீபத்திய அறிவிப்புப் படி, மோட்டோரோலா ஜி 100 ஸ்மார்ட்போன் மாடல் மோட்டோரோலா எட்ஜ் எஸ் போனின் உலகளாவிய பதிப்பாகக் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்துடன், டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் வெளியிட்டுள்ள தகவல்படி மோட்டோரோலா ஜி 100 ஸ்மார்ட்போன், மோட்டோரோலா எட்ஜ் எஸ் போனின் உலகளாவிய பதிப்பு தான் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

மோட்டோரோலா ஜி 100

மோட்டோரோலா ஜி 100

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் பேஸ் வேரியண்ட் மாடலின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.22,500 ஆகும். மோட்டோரோலா ஜி 100 ஸ்மார்ட்போன் ஸ்னாப் டிராகன் 870 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம், அண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது.

WhatsApp புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மே 15-க்குப் பிறகு என்ன நடக்கும்?WhatsApp புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மே 15-க்குப் பிறகு என்ன நடக்கும்?

கீக் பெஞ்ச் மதிப்பெண்

கீக் பெஞ்ச் மதிப்பெண்

மோட்டோரோலா ஜி 100 ஸ்மார்ட்போன் அதன் சிங்கிள் கோர் சோதனையில் 957 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 2815 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இப்போது கூறப்படும் படி இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாடல் தான் என்றால், நாம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் மாடலின் சிறப்பம்சங்களுடன் உலகளாவிய பாதிப்பான மோட்டோரோலா ஜி 100 உடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிறப்பம்சம்

மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிறப்பம்சம்

 • 6.7 இன்ச் 1080 × 2520 பிக்சல்கள் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி எஃப்எச்.டி பிளஸ் டிஸ்பிளே
 • அண்ட்ராய்டு 11
 • 6 ஜிபி அல்லது 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம்
 • 128 ஜிபி அல்லது 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
 • டிரிபிள் கேமரா அமைப்பு
 • 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
 • 16 மெகா பிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா
 • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
 • இரட்டை செல்பி கேமரா அமைப்பு
 • அதில் ஒன்று 16 மெகா பிக்சல் கேமரா
 • 20W ஃபாஸ்ட் சார்ஜிங்
 • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Motorola Edge S to launch as Motorola G100 globally : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X