Home
Mobile

Motorola Edge S ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய்பபட்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்தியாவிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு
கொண்டுவரப்படும்.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2520×1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh, எச்டிஆர் 10 ஆதரவு, 21:9 என்ற திரைவிகிதம், 560 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் குவா

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவும் கொண்டுள்ளது. எனவே கேமிங் போன்ற அம்சங்களு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 பின்புறம் 64எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ToF stereoscopic டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்று

5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,548-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X