Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,அதைப் பற்றி பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் டிஸ்பிளே
வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனம் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் மாடல்களுக்கு போட்டியாக இதன் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

8ஜிபி/12ஜிபி ரேம்
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும்எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 5ஜிபி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் கேமரா
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனத்தின் கேமரா பற்றி பேசுகையில், கண்டிப்பாக மூன்று ரியர் கேமரா ஆதரவுடன்இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

4000எம்ஏஎச் பேட்டரி
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications