மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சரியாக ஆறு மாதங்களுக்கு பிறகு மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு இந்த ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன் ஒரு ஒரு புதிய பாதுகாப்பு இணைப்பைப் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனம்.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
மேலும் வெரிசோனின் வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி முதலில் அமெரிக்காவில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் பயனர்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் உள்ளமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்க்பபடுகிறது. மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனத்தின் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

2520 × 1080 பிக்சல்
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2520 × 1080 பிக்சல் தீர்மானம் , எச்டிஆர் 10+ ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி
இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டு ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

3.5 மிமீ ஆடியோ ஜாக்
5ஜி, வைஃபை 6 802.11, (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டாகசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications