Home
Mobile

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. pOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. சேலுக்கு வந்த Motorola போன்!

இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola edge 70) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஸ்லிம் மாடல்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், அந்த மாடல்களின் விலையில் இருந்து பாதிக்குப்பாதி விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 கிடைக்கிறது. இதன் விற்பனை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் மோட்டோ இந்திய தளங்களில் விற்பனை தொடங்கிவிட்டது. பிளிப்கார்ட் தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. pOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

பாண்டோன் லில்லி பேட் (PANTONE Lily Pad), பாண்டோன் கேஜெட் கிரே (PANTONE Gadget Grey) மற்றும் பாண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் (PANTONE Bronze Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 5.99 எம்எம் தடிமன் பாடி மற்றும் மொத்தமாகவே 159 கிராம் எடை மட்டுமே கொடுக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் மாடலாக இருந்தும், MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola edge 70 Specifications): 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது.

எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 300 Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்.

4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படும். மேலும், அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3-இன்-1 லைட் சென்சார் கொண்டுள்ளது. குவாட் பிக்சல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

மேலும், அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன், ஆடியோ ஜூம், டுயல் கேப்ச்சர், பேஸ் டச், அரிசோன் லாக் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஆட்டோ போகஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 20 எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். ஆக்சன் ஷாட், ஆட்டோ நைட் விஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், பேஸ் ரீடச் போன்ற பீச்சர்களையும் இந்த கேமரா கொடுத்துள்ளது.

செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன், MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி போக IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 With 8GB RAM Available At Rs 28999 on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X