Home
Mobile

இந்தியாவே மிரண்டுபோன ஸ்லிம் ஸ்மார்ட்போன்.. 5.99 மிமீ பாடி.. 5000mAh பேட்டரி.. 50MP கேமராவுடன் புது Moto போன்!

இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலான மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola edge 70) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 5.99 மிமீ ஸ்லிம் பாடியில் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், பிஓஎல்இடி டிஸ்பிளே, 256 ஜிபி மெமரி, 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola edge 70 Specifications): மோட்டோரோலா பிரியர்கள் விரும்பும்படியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.

இந்தியாவே மிரண்டுபோன ஸ்லிம் ஸ்மார்ட்போன்.. 5.99 மிமீ பாடி.. மாடல்?

3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கொண்டுள்ளது. மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டுயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் கொடுக்கிறது.

மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 50 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மோட்டோ ஏஐ 2.0 (moto ai 2.0) கொண்டுள்ளது. இதில் ஏஐ இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), ஸ்டைல் சின்க் (Style Sync) பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்தியாவே மிரண்டுபோன ஸ்லிம் ஸ்மார்ட்போன்.. 5.99 மிமீ பாடி.. மாடல்?

இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரி கொண்டிருந்தும், 5.99 மிமீ மட்டுமே தடிமன் கொண்டுள்ளது. மேலும், 159 கிராம் மட்டுமே எடை வருகிறது. MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

மேலும், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 வெளியாகி இருக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது.

டிசம்பர் 23ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோ தளத்தில் விற்பனை தொடங்குகிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பேண்டோன் லில்லி பேட், பேண்டோன் கேஜெட் கிரே மற்றும் பேண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் ஆகிய கலர்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 With 50MP Camera Launched in India Sale From December 13 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X