நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Motorola 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போன் ஆனது நாளை (டிசம்பர் 15) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த புதிய மோட்டோரோலா போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோரோலா போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.
குறிப்பாக ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன், 159 கிராம் எடை கொண்டுள்ளது.
இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் உள்ளன.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன . மேலும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
போன் பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் வாங்க கிடைக்கும். 5000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








