Motorola முடிச்சு விட்டான்.. புது Ultra மாடல்.. 5ஜி, OLED டிஸ்பிளே, 16GB ரேம், பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன. அது மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா (Motorola Edge 70 Ultra) மாடல் ஆகும். 2024 இல் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படாததால் இது மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவின் "அப்டேடட் வெர்ஷன்" ஆக இருக்கும்
ஆண்ட்ராய்டுஹெட்லைன்ஸ் வழியாக லீக் ஆன புகைப்படங்கள் ஆனது மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ஒரு டெக்ஸ்ச்சர்டு ஃபினிஷை கொண்ட 2 கலர் ஆப்ஷன்களை காட்டுகிறது. இது கடந்த 2024 இல் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட ஈகோ லெதரில் இருந்து வித்தியாசமாகவும் தெரிகிறது.

கேமரா ஐலேன்ட் ஆனது 3 லென்ஸ்களுடன் மேல்-இடது மூலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதில் ப்ரைமரி, அல்ட்ராவைடு மற்றும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள் இடம்பெறலாம். ஸ்மார்ட்போனின் ஃபிரேம் ஆனது மெட்டலால் ஆனதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் இருக்கிறது. இடது பக்கத்தில் ஏஐ தொடர்பான செயல்பாடுகளுக்கான ஒரு பிரத்யேக கீ உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.7 முதல் 6.8 இன்ச் அளவிலான, மெலிதான பெஸல்கள் மற்றும் பிளாட் OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- 16 ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான யுஎக்ஸ் ஓஎஸ்
- மேம்படுத்தப்பட்ட ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைடு சென்சார்களுடன் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ யூனிட்
எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம். இந்தியாவிற்கு வரும் போது இதன் விலை நிர்ணயம் ரூ.90,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.89,999 க்கு வெளியாகலாம்,.
நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் (LPDDR5x) + 512ஜிபி (UFS 4.0) ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.59,999 க்கு அறிமுகமானது. தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய ஹலோ யுஐ (ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டம்) கொண்டு இயங்குகிறது. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், எச்டிஆர்10+ மற்றும் 2500நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.7-இன்ச் 1.5கே (1,220x2,712 பிக்சல்ஸ்) எல்டிபிஎஸ் பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி LPDDR5X ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 512GB UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது; இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் ஓம்னி-டைரக்ஷனல் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 122 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எஃப்/2.0 அபெர்ச்சர் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 அபர்ச்சர் கொண்ட 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வரும் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பேஸ் அன்லாக் அம்சத்திற்கான ஆதரவையும் வழங்குகிறது. மேலும் இது நிறுவனத்தின் மோட்டோ செக்யூர் மற்றும் திங்க்ஷீல்டு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 125W டர்போபவர் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








