மிரள வைக்கும் Motorola.. OLED டிஸ்பிளே.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் உலக சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா (Motorola Edge 70 Ultra) எனும் போனில் தற்போது மோட்டோரோலா நிறுவனம் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா போன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 70 Ultra Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள்,120Hz ரெஃப்ரெஷ் ரேட் ,4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.
ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன் 159 கிராம் எடை கொண்டுள்ளது.
4800mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன
இந்த மோட்டோரோலா எட்ஜ் 7 விலை ஸ்மார்ட்போனின் 799 Euros (இந்திய மதிப்பில் ரூ.81,310)-ஆக உள்ளது.பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








